குறள்: 1251காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

Of womanly reserve love's axe breaks through the door,Barred by the bolt of shame before

மு.வரதராசன் உரை

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

சாலமன் பாப்பையா உரை

நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!

கலைஞர் உரை

காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது

Explanation

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty

Kural Info

குறள் எண்:1251
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நிறையழிதல்
இயல்:கற்பியல்