குறள்: 1322ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.

My 'anger feigned' gives but a little pain;And when affection droops, it makes it bloom again

மு.வரதராசன் உரை

ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

சாலமன் பாப்பையா உரை

ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.

கலைஞர் உரை

காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்

Explanation

His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike

Kural Info

குறள் எண்:1322
Category:காமத்துப்பால்
அதிகாரம்:ஊடலுவகை
இயல்:கற்பியல்