குறள்: 1330ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.

A 'feigned aversion' coy to pleasure gives a zest;The pleasure's crowned when breast is clasped to breast

மு.வரதராசன் உரை

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

சாலமன் பாப்பையா உரை

காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

கலைஞர் உரை

ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்

Explanation

Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike

Kural Info

குறள் எண்:1330
Category:காமத்துப்பால்
அதிகாரம்:ஊடலுவகை
இயல்:கற்பியல்