குறள்: 1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை?
O morn, how have I won thy grace? thou bring'st reliefO eve, why art thou foe! thou dost renew my grief
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் ``காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?'' என்று புலம்புகிறது
O eve, why art thou foe! thou dost renew my grief
| குறள் எண்: | 1225 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | பொழுதுகண்டு இரங்கல் |
| இயல்: | கற்பியல் |