குறள்: 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயும்என் மாயா உயிர்.

This darkening eve, my darkling soul must perish utterly;Remembering him who seeks for wealth, but seeks not me

மு.வரதராசன் உரை

( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.

கலைஞர் உரை

பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது

Explanation

My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth

Kural Info

குறள் எண்:1230
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல்
இயல்:கற்பியல்