குறள்: 1306துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.

Love without hatred is ripened fruit;Without some lesser strife, fruit immature

மு.வரதராசன் உரை

பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

சாலமன் பாப்பையா உரை

வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

கலைஞர் உரை

பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்

Explanation

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit

Kural Info

குறள் எண்:1306
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி
இயல்:கற்பியல்