குறள்: 1308நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்காதலர் இல்லா வழி.

What good can grieving do, when none who loveAre there to know the grief thy soul endures

மு.வரதராசன் உரை

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

சாலமன் பாப்பையா உரை

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?

கலைஞர் உரை

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

Explanation

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?

Kural Info

குறள் எண்:1308
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி
இயல்:கற்பியல்