குறள்: 1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்?

Withdraw, it burns; approach, it soothes the pain;Whence did the maid this wondrous fire obtain

மு.வரதராசன் உரை

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

சாலமன் பாப்பையா உரை

தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?

கலைஞர் உரை

நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்

Explanation

From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

Kural Info

குறள் எண்:1104
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல்
இயல்:களவியல்