குறள்: 1105வேட் ட பொழுதின் அவையவை போலுமேதோட் டார் கதுப்பினாள் தோள்.

In her embrace, whose locks with flowery wreaths are bound,Each varied form of joy the soul can wish is found

மு.வரதராசன் உரை

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை

நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

கலைஞர் உரை

விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன

Explanation

Each varied form of joy the soul can wish is found

Kural Info

குறள் எண்:1105
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல்
இயல்:களவியல்