குறள்: 1289மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.

Love is tender as an opening flower In season dueTo gain its perfect bliss is rapture known to few

மு.வரதராசன் உரை

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

சாலமன் பாப்பையா உரை

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே

கலைஞர் உரை

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்

Explanation

Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature

Kural Info

குறள் எண்:1289
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புணர்ச்சி விதும்பல்
இயல்:கற்பியல்