குறள்: 1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,Is she a maid of human kind? All wildered is my mind
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed
| குறள் எண்: | 1081 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | தகை அணங்குறுத்தல் |
| இயல்: | களவியல் |