மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
குறள்: 1082நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து.
குறள்: 1083பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.
குறள்: 1084கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண்.
குறள்: 1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.
குறள்: 1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்இவள் கண்.
குறள்: 1087கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.
குறள்: 1088ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடு.
குறள்: 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குஅணியெவனோ ஏதில தந்து.
குறள்: 1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.