குறள்: 611அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.

Say not, 'Tis hard', in weak, desponding hour,For strenuous effort gives prevailing power

மு.வரதராசன் உரை

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,

சாலமன் பாப்பையா உரை

நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

கலைஞர் உரை

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்

Explanation

Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it)

Kural Info

குறள் எண்:611
Category:பொருட்பால்
அதிகாரம்:ஆள்வினை உடைமை
இயல்:அரசியல்