குறள்: 613தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.

In strenuous effort doth resideThe power of helping others: noble pride

மு.வரதராசன் உரை

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

கலைஞர் உரை

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்

Explanation

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts

Kural Info

குறள் எண்:613
Category:பொருட்பால்
அதிகாரம்:ஆள்வினை உடைமை
இயல்:அரசியல்