குறள்: 616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.

Effort brings fortune's sure increase,Its absence brings to nothingness

மு.வரதராசன் உரை

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

கலைஞர் உரை

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்

Explanation

Labour will produce wealth; idleness will bring poverty

Kural Info

குறள் எண்:616
Category:பொருட்பால்
அதிகாரம்:ஆள்வினை உடைமை
இயல்:அரசியல்