குறள்: 851இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரக்கும் நோய்.
Hostility disunion's plague will bring,That evil quality, to every living thing
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்
The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise
| குறள் எண்: | 851 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இகல் |
| இயல்: | நட்பியல் |