குறள்: 853இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்.

If enmity, that grievous plague, you shun,Endless undying praises shall be won

மு.வரதராசன் உரை

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

கலைஞர் உரை

மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்

Explanation

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame

Kural Info

குறள் எண்:853
Category:பொருட்பால்
அதிகாரம்:இகல்
இயல்:நட்பியல்