குறள்: 854இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.

Joy of joys abundant grows,When malice dies that woe of woes

மு.வரதராசன் உரை

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

கலைஞர் உரை

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்

Explanation

If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight

Kural Info

குறள் எண்:854
Category:பொருட்பால்
அதிகாரம்:இகல்
இயல்:நட்பியல்