குறள்: 392எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live

மு.வரதராசன் உரை

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

கலைஞர் உரை

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்

Explanation

Letters and numbers are the two eyes of man

Kural Info

குறள் எண்:392
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்வி
இயல்:அரசியல்