குறள்: 398ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து.

The man who store of learning gains,In one, through seven worlds, bliss attains

மு.வரதராசன் உரை

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

கலைஞர் உரை

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்

Explanation

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births

Kural Info

குறள் எண்:398
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்வி
இயல்:அரசியல்