குறள்: 400கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.

Learning is excellence of wealth that none destroy;To man nought else affords reality of joy

மு.வரதராசன் உரை

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

சாலமன் பாப்பையா உரை

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

கலைஞர் உரை

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை

Explanation

Learning is the true imperishable riches; all other things are not riches

Kural Info

குறள் எண்:400
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்வி
இயல்:அரசியல்