குறள்: 1071மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்.

The base resemble men in outward form, I ween;But counterpart exact to them I've never seen

மு.வரதராசன் உரை

மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

சாலமன் பாப்பையா உரை

கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.

கலைஞர் உரை

குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்

Explanation

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)

Kural Info

குறள் எண்:1071
Category:பொருட்பால்
அதிகாரம்:கயமை
இயல்:குடியியல்