குறள்: 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.
The good to those will profit yield fair words who use;The base, like sugar-cane, will profit those who bruise
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.
குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்
The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death
| குறள் எண்: | 1078 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கயமை |
| இயல்: | குடியியல் |