குறள்: 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.

Wealth of wealth is wealth acquired be ear attent;Wealth mid all wealth supremely excellent

மு.வரதராசன் உரை

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

கலைஞர் உரை

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

Explanation

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth

Kural Info

குறள் எண்:411
Category:பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
இயல்:அரசியல்