குறள்: 420செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என்?

His mouth can taste, but ear no taste of joy can give!What matter if he die, or prosperous live

மு.வரதராசன் உரை

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

சாலமன் பாப்பையா உரை

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

கலைஞர் உரை

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்

Explanation

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

Kural Info

குறள் எண்:420
Category:பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
இயல்:அரசியல்