குறள்: 823பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது.

To heartfelt goodness men ignoble hardly may attain,Although abundant stores of goodly lore they gain

மு.வரதராசன் உரை

பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை

மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.

கலைஞர் உரை

அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்

Explanation

Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart

Kural Info

குறள் எண்:823
Category:பொருட்பால்
அதிகாரம்:கூடா நட்பு
இயல்:நட்பியல்