குறள்: 824முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்.

'Tis fitting you should dread dissemblers' guile,Whose hearts are bitter while their faces smile

மு.வரதராசன் உரை

முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

கலைஞர் உரை

சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்

Explanation

One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart

Kural Info

குறள் எண்:824
Category:பொருட்பால்
அதிகாரம்:கூடா நட்பு
இயல்:நட்பியல்