குறள்: 825மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற்று அன்று.
When minds are not in unison, 'its never; just,In any words men speak to put your trust
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart
| குறள் எண்: | 825 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கூடா நட்பு |
| இயல்: | நட்பியல் |