குறள்: 826நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்.

Though many goodly words they speak in friendly tone,The words of foes will speedily be known

மு.வரதராசன் உரை

நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

சாலமன் பாப்பையா உரை

நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.

கலைஞர் உரை

பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்

Explanation

Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)

Kural Info

குறள் எண்:826
Category:பொருட்பால்
அதிகாரம்:கூடா நட்பு
இயல்:நட்பியல்