குறள்: 556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.

To rulers' rule stability is sceptre right;When this is not, quenched is the rulers' light

மு.வரதராசன் உரை

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

கலைஞர் உரை

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்

Explanation

Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance

Kural Info

குறள் எண்:556
Category:பொருட்பால்
அதிகாரம்:கொடுங்கோன்மை
இயல்:அரசியல்