குறள்: 951இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.

Save in the scions of a noble house, you never findInstinctive sense of right and virtuous shame combined

மு.வரதராசன் உரை

நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

சாலமன் பாப்பையா உரை

சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

கலைஞர் உரை

நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது

Explanation

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born

Kural Info

குறள் எண்:951
Category:பொருட்பால்
அதிகாரம்:குடிமை
இயல்:குடியியல்