குறள்: 439வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.

Never indulge in self-complaisant mood,Nor deed desire that yields no gain of good

மு.வரதராசன் உரை

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

கலைஞர் உரை

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது

Explanation

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things

Kural Info

குறள் எண்:439
Category:பொருட்பால்
அதிகாரம்:குற்றங்கடிதல்
இயல்:அரசியல்