குறள்: 965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,Though like a hill their high estate, they sink to nought
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing
| குறள் எண்: | 965 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | மானம் |
| இயல்: | குடியியல் |