குறள்: 691அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்
Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof
| குறள் எண்: | 691 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | மன்னரைச் சேர்ந்து ஒழுகல் |
| இயல்: | அமைச்சியல் |