குறள்: 609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.

Who changes slothful habits savesHimself from all that household rule depraves

மு.வரதராசன் உரை

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

கலைஞர் உரை

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்

Explanation

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear

Kural Info

குறள் எண்:609
Category:பொருட்பால்
அதிகாரம்:மடி இன்மை
இயல்:அரசியல்