குறள்: 731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு.

Where spreads fertility unfailing, where resides a band,Of virtuous men, and those of ample wealth, call that a 'land'

மு.வரதராசன் உரை

குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை

குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

கலைஞர் உரை

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்

Explanation

A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and

Kural Info

குறள் எண்:731
Category:பொருட்பால்
அதிகாரம்:நாடு
இயல்:அரணியல்