குறள்: 1041இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.

You ask what sharper pain than poverty is known;Nothing pains more than poverty, save poverty alone

மு.வரதராசன் உரை

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

கலைஞர் உரை

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை

Explanation

There is nothing that afflicts (one) like poverty

Kural Info

குறள் எண்:1041
Category:பொருட்பால்
அதிகாரம்:நல்குரவு
இயல்:குடியியல்