குறள்: 1046நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.

Though deepest sense, well understood, the poor man's words convey,Their sense from memory of mankind will fade away

மு.வரதராசன் உரை

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

கலைஞர் உரை

அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்

Explanation

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression

Kural Info

குறள் எண்:1046
Category:பொருட்பால்
அதிகாரம்:நல்குரவு
இயல்:குடியியல்