குறள்: 1049நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பாடு அரிது.

Amid the flames sleep may men's eyelids close,In poverty the eye knows no repose

மு.வரதராசன் உரை

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை

யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

கலைஞர் உரை

நெருப்புக்குள் படுத்துக் தூங்குவதைகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்

Explanation

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty

Kural Info

குறள் எண்:1049
Category:பொருட்பால்
அதிகாரம்:நல்குரவு
இயல்:குடியியல்