குறள்: 1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடியுண் டாயினும் இல்.
Amid accumulated millions they are poor,Who nothing give and nought enjoy of all they store
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches
| குறள் எண்: | 1005 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | நன்றியில் செல்வம் |
| இயல்: | குடியியல் |