குறள்: 1007அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.

Like woman fair in lonelihood who aged grows,Is wealth of him on needy men who nought bestows

மு.வரதராசன் உரை

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

கலைஞர் உரை

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது

Explanation

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband

Kural Info

குறள் எண்:1007
Category:பொருட்பால்
அதிகாரம்:நன்றியில் செல்வம்
இயல்:குடியியல்