குறள்: 797ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.

'Tis gain to any man, the sages say,Friendship of fools to put away

மு.வரதராசன் உரை

ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை

அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.

கலைஞர் உரை

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்

Explanation

It is indead a gain for one to renounce the friendship of fools

Kural Info

குறள் எண்:797
Category:பொருட்பால்
அதிகாரம்:நட்பாராய்தல்
இயல்:நட்பியல்