குறள்: 591உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்உடையது உடையரோ மற்று.
'Tis energy gives men o'er that they own a true control;They nothing own who own not energy of soul
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?
| குறள் எண்: | 591 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | ஊக்கம் உடைமை |
| இயல்: | அரசியல் |