குறள்: 600உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு.
Firmness of soul in man is real excellance;Others are trees, their human form a mere pretence
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை
Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men
| குறள் எண்: | 600 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | ஊக்கம் உடைமை |
| இயல்: | அரசியல் |