குறள்: 584வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்குஅனைவரையும் ஆராய்வது ஒற்று.

His officers, his friends, his enemies,All these who watch are trusty spies

மு.வரதராசன் உரை

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை

அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

கலைஞர் உரை

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்

Explanation

He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies

Kural Info

குறள் எண்:584
Category:பொருட்பால்
அதிகாரம்:ஒற்றாடல்
இயல்:அரசியல்