குறள்: 587மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பாடு இல்லதே ஒற்று.
A spy must search each hidden matter out,And full report must render, free from doubt
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known
| குறள் எண்: | 587 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | ஒற்றாடல் |
| இயல்: | அரசியல் |