குறள்: 872வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.

Although you hate incur of those whose ploughs are bows,Make not the men whose ploughs are words your foes

மு.வரதராசன் உரை

வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

கலைஞர் உரை

படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது

Explanation

Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words

Kural Info

குறள் எண்:872
Category:பொருட்பால்
அதிகாரம்:பகைத்திறம் தெரிதல்
இயல்:நட்பியல்