குறள்: 771என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்நின்று கல்நின் றவர்.

Ye foes stand not before my lord for many a oneWho did my lord withstand, now stands in stone

மு.வரதராசன் உரை

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை

பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.

கலைஞர் உரை

போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்

Explanation

O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues

Kural Info

குறள் எண்:771
Category:பொருட்பால்
அதிகாரம்:படைச் செருக்கு
இயல்:படையில்