குறள்: 769சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.

Where weakness, clinging fear and povertyAre not, the host will gain the victory

மு.வரதராசன் உரை

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.

சாலமன் பாப்பையா உரை

எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.

கலைஞர் உரை

சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்

Explanation

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty

Kural Info

குறள் எண்:769
Category:பொருட்பால்
அதிகாரம்:படை மாட்சி
இயல்:படையில்