குறள்: 804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின்.
When friends unbidden do familiar acts with loving heart,Friends take the kindly deed in friendly part
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்
If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability
| குறள் எண்: | 804 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பழைமை |
| இயல்: | நட்பியல் |